பிரித்தானியாவை சேர்ந்தவர் லலே ஷவரவ்ஷ் (55). இவருக்கு 14 வயதில் Paris Shahravesh என்கிற மகள் இருக்கிறார். இவருடைய கணவர் டாஸ் சாண்டோஸ் (55), சில வருடங்களுக்கு முன் விவாகரத்து பெற்று சமா அல் ஹம்மாடி (42) என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
இதனை விரும்பாத லலே ஷவரவ்ஷ் தன்னுடைய கணவரின் இரண்டாவது மனைவியை கழுதை என பேஸ்புக்கில் விமர்சித்திருந்தார்.
இதனால் கடந்த மார்ச் மாதம் இறந்த தன்னுடைய கணவரின் இறுதி சடங்கில் பங்கேற்க சென்ற போது துபாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அதற்கு பொதுமக்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், சில நாட்களிலே விடுதலையானார்.
இந்த நிலையில் அவருடைய 500,000 பவுண்டுகள் மதிப்புள்ள பரம்பரை சொத்துக்களை Paris Shahravesh-ற்கு கொடுக்க துபாய் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
துபாய் சட்டப்படி முஸ்லிம் அல்லாதோருக்கு வாரிசு சொத்துக்கள் சேராது எனவும், Paris Shahravesh ஒரு கிறிஸ்தவர் என நீதிமன்றம் கூறியுள்ளது.
இதனால் இந்த பரம்பரை சொத்து மதிப்பு முழுவதும் இரண்டாவது மனைவி சமா அல் ஹம்மாடிக்கு சென்றடையும் என உத்தரவிட்டுள்ளது.
அவர் உயிருடன் சமயத்தில் என் மகளிடம் இருந்து கணவரை தனிமைப்படுத்தும் முயற்சியினையே ஹம்மாடி மேற்கொண்டிருந்தார். அவர் இறந்த பின்னரும் கூட என் மகளை தனிமைப்படுத்த முயற்சிக்கிறார். இது வேதனைக்குரிய விடயம் என லலே கூறியுள்ளார்.
இதற்கு பதில் கொடுத்துள்ள ஹம்மாடி, நான் முறைப்படி என் ஆவணங்களையும், சாண்டோஸின் ஆவணங்களையும் நீதிமன்றத்தில் சமர்பித்தேன். அவருக்கு ஒரு மகளும், சகோதரிகளும் இருப்பதை குறிப்பிட்டிருந்தேன்.
ஆனால் நீதிமன்றம் அதனை நிராகரித்து, முஸ்லிம் சொத்து முஸ்லிமிற்கு மட்டுமே என கூறிவிட்டார்கள். நானும் என்னுடைய கணவரும் முஸ்லிம். ஆனால் உங்களுடைய மகள் ஒரு கிறிஸ்தவர் என கூறியுள்ளார்.
இந்த நிலையில் லலே ஷவரவ்ஷ் தீர்ப்பினை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளார். அந்த சொத்துக்கள் நிச்சயம் தன்னுடைய மகளுக்கு கிடைக்கும் என தான் நம்புவதாக தெரிவித்துள்ளார்.
தவறான தகவலை யாரோ நீதிபதிக்கு தெரியப்படுத்தியுள்ளனர். நான் ஒரு முஸ்லிம். என்னுடைய மகள் பிரித்தானிய முஸ்லீம் என கூறியுள்ளார்.