அரசாங்கத்திற்கு பாடம் கற்பித்த முஸ்லிம்கள்?

கடந்த 26ஆம் திகதி சாய்ந்தமருது பிரதேசத்தில் தீவிரவாதிகளை படையினருக்கு காட்டிக்கொடுத்த மூவருக்கு 30 இலட்சம் ரூபாய் பணம் சன்மானமாக வழங்கப்பட்டது.

எனினும் குறித்த பணத்தை அவர்கள் திருப்பிக் கொடுத்துள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற பயங்கரவாத செயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்த பணத்தை வழங்குமாறு அரசாங்கத்தை கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முஸ்லிம் மக்கள் பயங்கரவாதத்தையோ, பயங்கரவாதிகளையோ ஒரு போதும் ஆதரிக்கவில்லை. எமது தாய் நாட்டுக்கே விசுவாசமாக உள்ளோம் என்பதை உலகுக்கு காட்டவே அரசு வழங்கிய சன்மானத்தை பெற மறுத்ததாக இவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் சாய்ந்தமருது மக்கள் நீண்டகாலமாக தமக்கான உள்ளூராட்சி மன்றம் ஒன்றை கோரிவருகின்றார்கள்.

ஆகவே கட்சி பேதங்களுக்கு அப்பால், எமது தியாகத்தை மதித்து இதை மட்டும் எங்களுக்கு வழங்குங்கள் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.