சிறப்பு பாடம் என்ற பெயரில்., பேராசிரியர்கள் செய்த கொடூரம்.!

இந்த உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான பல அநீதிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒன்றும் அறியாத குழந்தைகளை மிரட்டி பாலியல் வன்கொடுமைக்கு உபயோகம் செய்யும் துயரமானது தொடர்ந்து அரங்கேறி வருகிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக அரசு பள்ளியில் வெளியான வீடியோ பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில்., ஹரியானா மாநிலத்தில் உள்ள பாரிபத் நகரில் அரசு கல்லூரி செயல்பட்டு வருகிறது.

இந்த கல்லூரியில் குறைவான மதிப்பெண்களை பெற்றுள்ள மாணவிகளை அழைத்து மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் எடுப்பதாக கூறி., மாணவிகளை கல்லூரிக்கு அழைத்து கல்லூரி பேராசிரியர்கள் என்ற பெயரில் காம கொடூரர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளனர்.

இதனால் பாதிக்கப்பட்ட மாணவி., பேராசிரியர்கள் அலைபேசியில் பேசுவதை பதிவு செய்து., அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர் உடனடியாக விசாரணை மேற்கொண்டு., பேராசிரியர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில்., குறைவான மதிப்பெண்கள் எடுத்த மாணவிகளை சிறப்பு வகுப்புகள் என்ற பெயரில் வரவழைத்து., தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களை பெற ஆலோசனை வழங்குவதாக கூறி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்குவோம்.

சில மாணவிகள் எங்களிடம் இருந்து தப்பிக்க முயற்சித்தாலும் அவர்களை விடாது பலாத்காரம் செய்தோம்., சில மாணவிகள் எங்களின் பேச்சுக்களை உண்மை என்று நம்பி ஏமார்ந்து இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தற்போது வெளிவந்து பெரும் அதிர்வலையை பதிவு செய்துள்ளது.