இரவு நேரத்தில் கொள்ளிடம் பாலத்துக்கு அடியில என்ன நடக்குது தெரியுமா.?

நாகை மாவட்டம் கொள்ளிடம் சோதனைச்சாவடி அருகே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே சுமார் ஒரு கிமீ தூரத்துக்கு ரயில் பாலம் கட்டப்பட்டுள்ளது.

கடலூர் மற்றும்நாகை மாவட்டத்தை இணைக்கும் வகையில் கட்டப்பட் டுள்ள இந்த பாலத்தில் தற்போது டீசல் இன்சின் ரயில்சேவை நடைபெறும் நிலையில் மின்சார ரயில் சேவைக்கானபணி முழுவீச்சில் நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்த பாலம் கடந்த சில மாதங்களாக இரவு மற்றும் பகல் நேர மதுபிரியர்களின் பாராக மாறி வருகிறது.

மேலும் பல சமூக விரோத செயல்களும் நடைபெறுகின்றன. சிலர் பாலத்தின் அடிப்பகுதியில் உள்ள பாதுகாப்புகம்பிகளை அகற்றி சேதப்படுத்தி உள்ளனர்.

மது பாட்டில்களை உடைத்தும் போட்டு விட்டுச் சென்று விடுகின்றனர். எனவே ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் அதிகாரிகள் உடனடியாக பாலத்தை பார்வையிட்டு ஆய்வு செய்துபாலத்திற்கு சேதம் ஏற்படாதவாறு பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.