மத்திய அமைச்சரவையில், அதிமுகவுக்கு 2 அமைச்சர் பதவி?

மத்திய அமைச்சரவையில் பிரதமர் உட்பட 58 பேர் புதிய அமைச்சராக பொறுப்பற்றனர். கூட்டணி கட்சிகளை சேர்ந்த நான்கு பேருக்கு மட்டும் மத்திய அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிமுகவினருக்கு அமைச்சர் பதவி வழங்கவில்லை அதிமுக உட்கட்சி மோதல் தான் இதற்கு காரணம் என கூறப்பட்டு வரும் நிலையில், வேலூர் தொகுதியில் தேர்தலுக்கு பிறகு அதிமுக மத்திய அமைச்சரவையின் கண்டிப்பாக இடம்பெறும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். 81 பேர் வரை மத்திய அமைச்சரவையில் இடம்பெறலாம்.

தற்போது 58 பேர் மட்டுமே இருக்கும் நிலையில், அடுத்த கட்டமாக அமைச்சரவை விரிவாக்கம் செய்யும் போது அதிமுக நிச்சயம் இடம்பெறும். அப்போது பாஜகவின் கூட்டணிக் கட்சிகளுக்கும் அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று கூறினார். அதிமுக சார்பில் இரண்டு பேருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் பெறலாம் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.