மைத்திரிக்கு பெரும் சிக்கல்! 11 நீதிபதிகள் களத்தில்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான வழக்கை விசாரிக்க உயர்நீதிமன்றத்தின் 11 நீதியரசர்கள் அடங்கிய முழுமையான நீதியரசர் குழு அமர வேண்டும் என சட்டமா அதிபர் நீதிமன்றில் கோரவுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குற்றச் செயலைத் தடுக்கத் தவறியதால் (Criminal negligence) 21/4 தாக்குதல் நடந்ததாக குற்றம் சுமத்தி, ஜனாதிபதி மீது பொறுப்புக்கூறும் (Vicarious Liability) மனித உரிமை வழக்கொன்று தற்போது உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

21/4 தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் சார்பாக ஐவர் இணைந்து சட்டமா அதிபர் உள்ளிட்டவர்களை பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டு, நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரமொன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.

19ஆவது அரசமைப்புத் திருத்தத்தின் ஊடாக நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதிக்கு இருந்த அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதிக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கமையவே ஜனாதிபதிக்கு எதிரான இந்த மனித உரிமை வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.