பதவியேற்ற உடனே பதவியை இழக்கும் பிரதமர்.. மீண்டும் நாடாளுமன்ற தேர்தல்..!

இஸ்ரேலில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் அதிக வாக்குகள் பெற்ற பிரதமர் பெஞ்சமின் நேதான்யாஹூ மீண்டும் வெற்றி பெற்றார். இவர் இஸ்ரேல் பிரதமராக ஐந்தாவது முறையாக பொறுப்பேற்றார்.

இஸ்ரேல் நாட்டின் சட்டப்படி மே 23 ஆம் தேதி நள்ளிரவுக்குள் பிரதமர் பெஞ்சமின் நேதான்யாஹூ இஸ்ரேவின் புதிய அரசை உருவாக்க வேண்டும். அவர்கள் திட்டமிட்டபடி கூட்டணி அரசை உருவாக்க முடியவில்லை இஸ்ரோ பாராளுமன்றம் கலைக்கப்படும் வரும் செப்டம்பர் மாதம் மீண்டும் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேவில் 18 வயது பூர்த்தியான யூதர்கள் அனைவரும் கட்டாயம் ராணுவத்தில் பணியாற்ற வேண்டும். அதில் அரேபியர்கள் மற்றும் இஸ்ரேலில் வசிக்கும் பாலஸ்தீனியர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் யூத மதத்தின் பழமைவாத கொள்கை கொண்ட ஹாரேதி இஸ்ரேலியர்கள் குழுவினருக்கு இந்த சட்டத்திலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் பிரதமர் பெஞ்சமின் நேதான்யாஹூ அரசு ஹரேதி இஸ்ரேலியர்களையும் ராணுவப் பணியில் சேர்க்கும் மசோதா ஒன்றை அறிமுகம் செய்தார். அதற்கு ஹாரேதி இஸ்ரேலியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த மசோதா குறித்து விவாதம் நடைபெற்றது. மசோதா குறித்து இருதரப்பு பேச்சுவார்த்தை சுமுகமாக உடன்பாடு ஏற்படாததால் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் பிரதமர் அரசை உருவாக்க முடியவில்லை. ஆகையால் அந்நாட்டு அரசு கலைக்கப்பட்டு மீண்டும் பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.