புதிய கல்விக் கொள்கைக்கான வரைவை, புதிதாக பொறுப்பேற்றுள்ள மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போகிரியால் நிஷாங்கிடம் ஒப்படைத்தார்.
புதிய கழிவு கொள்கையில் தேசிய கல்வி ஆணையமும் உருவாக்குவது, மும்மொழி கொள்கையை உருவாக்குவது மற்றும் தனியார் பள்ளிகளின் கட்டண உயர்வை தடுப்பது போன்ற பல்வேறு பரிந்துரைகள் செய்யப்பட்டிருந்தனர்.
அதன்படி மும்மொழிக் கொள்கையை நாடு முழுவதும் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை அமல்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதில் இந்தி இல்லாத மாநிலங்களில் இந்தி கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இந்தி திணிப்புக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து #StopHindiImposition மற்றும் #TNAgainstHindiImposition ஹேஷ்டேக் ட்விட்டரில் உலக அளவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.