என்றுதான் தீருமோ இந்த வரதட்சணை பேராசை என்ற பெரும் பேய்…. சென்னையை அடுத்துள்ள கூடுவாஞ்சேரி ஆதனூர் பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர் தெருவை சார்ந்தவர் பாலசேகர். இவரது மனைவியின் பெயர் மகேஸ்வரி. இவர்கள் இருவருக்கும் உள்ள மகனின் பெயர் கார்த்திகேயன் (வயது 30). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இவருக்கும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம் பகுதியை சார்ந்த பரமேஸ்வரி (வயது 25) என்ற பெண்ணிற்கும் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டு., கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னதாக திருமணம் செய்யப்பட்டது. இவர்களின் திருமண சீர்வரிசையாக சுமார் 65 சவரன் நகைகள் மற்றும் சீர்வரிசைகள் வழங்கியுள்ளனர்.
இந்த நிலையில்., மீண்டும் உனது வீட்டிற்கு சென்று பணம் மற்றும் நகைகள் வாங்கி வா என்று கூறி., பரமேஸ்வரியை தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளான். இதற்கு கார்த்திகேயனின் பெற்றோரும் உடந்தையாக இருந்த நிலையில்., வீட்டில் உள்ள அறையில் பரமேஸ்வரி மற்றும் அவரது குழந்தையை அடைத்து., உணவு கூட வழங்காமல் துன்புறுத்தி வந்துள்ளான்.
இதனால் மகளிடம் ஒரு மாதமாக பேசாமல் இருந்த பரமேஸ்வரியின் பெற்றோர் சந்தேகமடைந்து வீட்டிற்கு சென்றுள்ளனர். கார்த்திகேயனின் இல்லத்திற்கு சென்று தனது மகளை கேட்டதற்கு வெளியே சென்றுள்ளார் என்று கூறவே., வீட்டின் உள்ளே இருந்த பரமேஸ்வரி கதவை தட்டி அலறி துடித்துள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்து பரமேஸ்வரி மற்றும் அவரது குழந்தையை மீட்டனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்., கணவரின் குடும்பத்தாருடன் சேர்ந்து வரதட்சணை கொடுமை செய்து வந்த நிலையில்., குழந்தைகளுக்கும் – மனைவிக்கும் சூடு வைத்து கொடுமை செய்து வந்துள்ளனர். இது தொடர்பான விசாரணையில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.