தியகாம்பல பிரதேசத்தில் ஒரே நாளில் வயோதிபக் கணவனும் மனைவியும் மரணமாகி உள்ளனர்.
தியகாம்பல என்ற இடத்தைச் சேர்ந்த வினிதா சந்திராவதி (வயது 87)என்பவரதும் அவரது கணவன் எம்.எம்.தர்மசேன (வயது 87) ஆகியோரே ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.
வினிதா சந்திராவதி நோய்வாய்ப்பட்டு பிபிலை அரசினர் வைத்தியசாலையில சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் அவரது உயிரிழப்பை அறிந்தவுடனேயே அவரது கணவன் மயக்கமுற்று வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்ட நிலையில் அவரும் உயிரிழந்துள்ளார்.
இவ்விரு மரணங்களும் 01-06-2019 இன்று மாலை பிபிலை மெதகமை மயானத்தில் அடக்கம் செய்யப்படுவதற்கான இறுதிக் கிரியைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்நிலையில் கணவனும் மனைவியும் ஒரே நேரத்தில் உயிரிழந்துள்ளமை குறித்த பகுதியில் பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.