கடந்த 30 ஆம் முதல் 2019 ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் இங்கிலாந்து நாட்டில் நடந்து வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து, தென்ஆப்ரிக்க அணிகள் மோதின. அதில் இங்கிலாந்து அணி வெற்றபெற்றது.
நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இதில் பாகிஸ்தான் அணி
வெறும் 104 ரன்களை மட்டுமே எடுத்தது அதிரடியாக ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி எளிதில் வெற்றி பெற்றது வெஸ்ட்இண்டீஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் 3 சிக்சர்களை விளாசினார். இதன் மூலம் உலகக்கோப்பையில் போட்டியில் அதிக சிக்ஸர்களை அடித்த வீரர்கள் பட்டியலில் கிறிஸ் கெய்ல் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
இதற்கு முன் தென் ஆப்பிரிக்காவின் டீ வில்லியர்ஸ் 37 சிக்ஸர்களும் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் கிறிஸ் கெய்ல் ஆகியோர் 37 சிக்ஸர்கள் அடித்து சமநிலையில் இருந்தனர். இந்நிலையில் நேற்று பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 3 சிக்ஸர்கள் அடித்ததன் மூலம் 40 சிக்ஸர்களுடன் கிறிஸ் கெய்ல் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
40 சிக்ஸர்களுடன் கிறிஸ் கெய்ல் முதல் இடத்தையும், 37 சிக்ஸர்களுடன் தென் ஆப்பிரிக்காவின் டீ வில்லியர்ஸ் இரண்டாம் இடத்திலும், 31 சிக்ஸர்களுடன் ஆஸ்திரேலிய அணியின் ரிக்கி பாண்டிங் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். இந்த பட்டியலில் முதல் பத்து இடங்களில் உள்ள வீரர்களின் கிறிஸ் கெய்லை தவிர மற்ற அனைத்து வீரர்களும் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.