கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்தில் உள்ள போதாங்கோட்டை பகுதியை சார்ந்தவர் வினோத் (வயது 35). இவரது மனைவியின் பெயர் ராகி (வயது 30)., இவர்கள் இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில்., கடந்த 12 ஆம் தேதியன்று வெளியே சென்று வந்த வினோத் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே., தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர்., வினோத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில்., கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து வினோத்தின் மனைவியிடம் மேற்கொண்ட விசாரணையில்., சந்தேகத்திற்கு இடமான வகையில் பதிலளித்துள்ளார்.
இதனையடுத்து அவரது குழந்தைகளை அழைத்து மேற்கொண்ட விசாரணையில்., வினோத்தின் உறவினர் மனோஜ் (வயது 39) மற்றும் எனது தாயார் சேர்ந்து கொலை செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த காவல் துறையினர்., ராகியை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில்., வினோத் எனது உறவினர் என்ற காரணத்தால் அடிக்கடி வீட்டிற்கு வருவார். அந்த நேரத்தில்., மனோஜிற்கும் – எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறவே., இருவரும் அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்தோம்.
இந்த பழக்கமானது எனது கணவருக்கு தெரியவரவே இருவரையும் கண்டித்ததால்., ஆத்திரமடைந்த நாங்கள் இருவரும் அவரை கொலை செய்தோம் என்று தெரிவித்துள்ளனர். இதனையடுத்து வினோத்தின் மனைவியை கைது செய்து., அவரின் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் இருவரையும் நீதிமன்றத்தில் சம்பர்ப்பித்தனர்.