இந்தியா முழுவதும் தமிழ்! அரசின் அறிவிப்பு!

மத்திய அரசு பதவியேற்றதும் புதிய கல்வி கொள்கையை வெளியிட்டுள்ளது. அதில் ஹிந்தி பேசாத மாநிலங்களில் ஹிந்தி மொழியை கட்டாயமாக்குவது குறித்து கூறப்பட்டுள்ளது பல்வேறு சர்ச்சைகளை உண்டாக்கியுள்ளது.

கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு, தேசிய கல்விக் கொள்கை குறித்த அறிக்கையை நேற்று சமர்ப்பித்துள்ளது. அதில் வருகின்ற ஒரு சாராம்சம் தான், ஹிந்தி பேசாத மாநிலங்களில் மாணவர்களின் மாநில மொழி மற்றும் ஆங்கிலம் இவற்றோடு ஹிந்தியையும் சேர்க்கலாம் என்று பரிந்துரையை வழங்கியுள்ளது.

இது வெறும் வரைவு அறிக்கையை தவிர இறுதியான உத்தரவு இல்லை. இதை ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்ளாததும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் முடிவில் தான் உள்ளது.

இந்த வரைவு அறிக்கை குறித்து, பொதுமக்கள் ஜூன் மாதம் வரை தங்கள் கருத்துக்களை வழங்கலாம் என மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது.

மேலும் இந்த வரைவு அறிக்கை ஏதோ ஹிந்தி மொழியை மட்டும் சேர்க்க வேண்டும் என்று கூறவில்லை. ஹிந்தி மொழி பேசக் கூடிய மாநிலங்களில் சமஸ்கிருதம், ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்டவற்றை பயிலும் மாணவர்கள் மூன்றாவதாக தமிழ் போன்ற மாநில மொழிகளையும் பாடத்தில் சேர்க்கலாம் எனவும் பரிந்துரை வழங்கியுள்ளது.

எனவே ஹிந்தி மொழி பேசாத மாநிலங்களில் ஹிந்தியை மூன்றாவது மொழியாகவும், அதே போல ஹிந்தி பேசும் மாநிலங்களில் தமிழ் போன்ற மாநில மொழிகளை மூன்றாவது மொழியாக சேர்க்கலாம் என்பதுதான் புதிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கையின் சாராம்சம்.

இந்த பரிந்துரையும் கூட அனைத்து மொழிகளுக்கும் சமமான முக்கியத்துவமும், வாய்ப்பும் வழங்கப்பட வேண்டும் என்ற அடிப்படையிலேயே வழங்கப்பட்டுள்ளது.
அதை விடுத்தது பல்வேறு பக்கங்கள் கொண்ட ஒரு நீண்ட அறிக்கையில் ஒரு குறிப்பிட்ட அம்சத்தை மட்டும் எடுத்துக்கொண்டு ஹிந்தி மொழியை திணிப்பதாக குற்றம்சாட்டுவது தவறான புரிதலாகவே தெரிகிறது.

ஹிந்தி பேசும் மாநிலங்களில் தமிழையும் மூன்றாவது மொழியாக சேர்க்கலாம் என்று கல்விக் கொள்கையின் அறிக்கை படமாக கீழே இணைக்கப்பட்டுள்ளது. நம்முடைய தமிழ் மொழியும், நாடு முழுவதும் மூன்றாவது மொழியாக படிக்கவும் வாய்ப்பு உள்ளது.