மக்களவை தேர்தலில் 352 தொகுதிகளை கைப்பற்றி பெரும்பான்மை பெற்ற பா.ஜ.க. தலைமையிலான அரசு மீண்டும் இரண்டாவது முறையாக ஆட்சியை கைப்பற்றியது. இதனையடுத்து டெல்லியில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் நரேந்திர மோடியும் இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்று கொண்டார்.
ஐதராபாத் மக்களவை தொகுதியில் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி போட்டியிட்டு தொடர்ந்து 4வது முறையாக ஐதராபாத் மக்களவை தொகுதியில் வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஓவைசி மீண்டும் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சி வந்துவிட்டதால் முஸ்லிம்கள் யாரும் கவலைப்பட தேவையில்லை மோடியால் கோவிலுக்கு சென்று வழிபட முடியுமென்றால், நம்மாளும் நம்முடைய மசூதிகளுக்கு சென்று வழி பட முடியும். மோடியால் குகைக்குள் அமர்ந்து தியானம் செய்ய முடியுமென்றால், முஸ்லிம்களாகிய நம்மாளும், மசூதிகளில் தொழுகை நடத்த முடியும். 352 இடங்களில் வெற்றி பெறுவது மிகப்பெரிய விஷயம் இல்லை. ஏனெனில், இந்தியா அரசியலைமைப்பு சட்டத்தில் வாழ்கிறது. 352 தொகுதிகளில் பா.ஜ.க வென்று விட்டதால் மட்டுமே அவர்களால் நமது(முஸ்லீம்) உரிமைகளை அவர்களால் பறித்துவிட முடியாது என ஓவைசி தெரிவித்தார்.