மும்பை போரிவேலி ரயில்நிலையம் அருகே இட்லி கடை வைத்திருக்கும் கடைக்காரர், தனது கடையில் இட்லி வேகவைப்பதற்க்காக ரயில் நிலையத்தில் உள்ள கழிவறையில் இருந்து தண்ணீரை ஒரு கேனில் பிடித்து செல்கிறார். அதனை பொதுமக்களில் ஒருவர் படம்பிடித்து நிலையில் அவருடன் சாதாரணமாக பேசியபடி அதே நீரை பிடித்து செல்கிறார். இந்த நீரை கொண்டு அவர் சமைத்து அந்த பகுதியில் விற்று வந்துள்ளார்.
ரயில் கழிவறையில் கேனில் பிடித்து சென்ற வீடியோ இணையத்தில் தீயாக பரவியது, இதனையடுத்து மும்பை உணவு மற்றும் மருந்துகள் மேலாண்மை அமைப்பு இது தொடர்பாக விசாரணைக்கு விசாரணை நடத்த உத்தரவுயிட்டது. மேலும் உணவு மற்றும் மருந்துகள் மேலாண்மை அதிகாரி வெளியிட்ட அறிக்கையில் இது போன்ற செயல்கள் மக்களின் உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும் செயல். வீடியோவில் இருக்கும் நபர் யார் எனத் தேடி வருகிறோம். அந்த நபர் கிடைத்தவுடன் அவரிடம் உணவகம் நடந்த லைசன்ஸ் இருக்கிறதா என்பதை முதலில் பரிசோதித்து அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
#हे राम! नींबू शरबत के बाद अब इडली भी गंदे पानी से !! इस वायरल वीडियो में इडली विक्रेता इडली के लिए # Borivali स्टेशन के शौचालय से गंदा पानी लेते हुए दिख रहा है #BMC #FDA ?@ndtvindia @MumbaiPolice @WesternRly pic.twitter.com/TFmRkgoMMN
— sunilkumar singh (@sunilcredible) May 31, 2019
இதற்கு முன் ரயிலில் டீ விற்பவர்கள் கழிவறை நீரைப் பிடித்துப் உபயோகிக்கும் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.