அரசு ஊழியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு?

தமிழக அரசு அலுவலங்களில் பணி புரியும் ஆண், பெண் ஊழியர்கள் சமீபகாலமாக நாகரீக உடை என சில அரை குறை ஆடைகளை அணிந்து வருவது தேவையில்லாத பிரச்சனைகளையும், விமர்சனத்தையும் ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பாக அரசு உயர் அதிகாரிகளுக்கு புகார்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த புகாரை தொடர்ந்து ஆடை விவகாரத்தில் சில கட்டுப்பாடுகளை செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள அரசாணையில் “தமிழக அரசு அலுவலங்களில் பணி புரியும் ஆண்கள் மற்றும் பெண்கள்அலுவலர்கள் தூய்மையான ஆடைகளை அணிந்து வர வேண்டும். மேலும் பெண்கள் சேலை, சுடிதார், சல்வார்கமிஸ் உள்ளிட்ட ஆடைகள் அணிந்து வரலாம். ஆனால் சுடிதார் மற்றும் சல்வார்கமிஷ் அணிந்து வரும் போது துப்பட்டா கண்டிப்பாக அணிந்து இருக்க வேண்டும்.

தமிழக அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஆண்கள் சதாரண பேண்ட், எப்போதும் போல சட்டை அணிந்து பணிக்கு வரலாம் ஆனால் டீ-சார்டுடன் அலுவலகத்துக்கு வருவதை தவிர்க்க வேண்டும். நீதிமன்ற விசாரணைக்கு செல்லும் ஆண்கள் கண்டிப்பாக கோட் அணிந்து செல்ல வேண்டும். பெண்கள் சேலை, சுடிதார் அணிந்து செல்லலாம். ஆனால் துப்பட்டா கண்டிப்பாக போட்டிருக்க வேண்டும்“ என லைமை செயலாளர் வெளியிட்ட அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.