இந்த உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான பல தொடர் அநீதிகள் நடைபெற்று வருகிறது. அவ்வாறு இழைக்கப்படும் அநீதிகள் அவர்களுக்கு தெரிந்த நபர்களின் மூலாகவே பெரும்பாலும் இழைக்கப்பட்டு வருகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருச்சூழி அருகேயுள்ள சிலுக்குப்பட்டியை சார்ந்தவர் வேல்லட்சுமி (வயது 28)., இவர் அருப்புக்கோட்டை பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் நர்ஸாக பணியாற்றி வருகிறார்.
இவர் தினமும் பணிக்கு தனியார் பேருந்தின் மூலமாக சென்று பின்னர் வீட்டிற்கு வருவது வழக்கம். அந்த வகையில்., நேற்று பணியை முடித்துவிட்டு பேருந்தில் திரும்பிக்கொண்டு இருந்த நேரத்தில்., பேருந்தின் கண்டக்டராக பணியாற்றி வரும் கருப்பசாமி இரட்டை வார்த்தைகளில் பேசி சில்மிஷம் செய்துள்ளான்.
இதனையடுத்து ஆத்திரமடைந்த லட்சுமி., தனது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கவே., பேருந்து நிறுத்தத்தில் தயாராக காத்திருந்த உறவினர்கள் கருப்பசாமியை நையப்புடைத்தனர். இதனையடுத்து கருப்பசாமி தனது நண்பர்களுக்கு தகவல் தெரிவிக்கவே., இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இந்த தகராறு கைகலப்பாக மாறவே., இருதரப்பும் கல்வீசி தாக்குதலை நடத்தி கொண்டதை அடுத்து., இந்த தகவல் காவல் துறையினருக்கு தெரியவந்துள்ளது. இந்த தகவலை அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.