சிங்களக் கிராமங்களில் சுற்றித் திரியும் சஹ்ரானின்ன கும்பல்கள்…!!

பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் பல உறுப்பினர்கள் மாற்றுப் பெயர்கள் சுற்றித் திரிவதாக புலனாய்வுத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

தங்களின் உரிய அடையாளங்களை மறைத்து கொள்வதற்தகாக பெயர், ஊரை மாற்றி கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.தாம் பிறந்த வளர்ந்த பிரதேசங்களில் இருந்து வெளியேறி நாட்டின் பல்வேறு இடங்களில் தங்கியிருப்பதாக தெரியவந்துள்ளது.அத்துடன் இந்த நபர்கள் தங்கள் அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டில் புதிய தகவல்களை உள்ளடக்கியுள்ளதாக தெரியவந்துள்ளதாக பாதுகாப்பு பிரிவின் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.அவர்களில் பலர் தமிழ் பெயர்களிலேயே இருப்பதாகவும், தங்களின் உரிய அடையாளங்களை மறைத்துள்ளமையினால் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.பெருமளமானவர்கள் சிங்கள பெயர்களில் சிங்கள கிராமங்களுக்குள் பயங்கரவாதிகள் நுழைந்துள்ளதாகவும், அவர்களை அடையாளம் கண்டுபிடிப்பதற்கு பாரிய சிரமங்களை எதிர்நோக்க நேரிடும் எனவும் பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.அவர்களின் புதிய அடையாளங்களை உறுதி செய்வதற்கு மிகவும் நுட்பமாக ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.