சிறுமியை பலாத்காரம் செய்ய மகனுக்கு உதவியாக இருந்த கொடூர தாய்.!

இந்த உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான பல தொடர் அநீதிகள் நடைபெற்று வருகிறது. அவ்வாறு இழைக்கப்படும் அநீதிகள் அவர்களுக்கு தெரிந்த நபர்களின் மூலாகவே பெரும்பாலும் இழைக்கப்பட்டு வருகிறது.

மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர் அருகேயுள்ள கல்லணை கட்டபொம்மன் நகரை சார்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மகனின் பெயர் வீரபாண்டி (வயது 19). இவனுக்கு அத்தை மகள் அதே பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில்., வீட்டில் தனியாக இருந்த அத்தை மகளிடம் சென்று உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறி., வலுக்கட்டாயமாக பலவந்தப்படுத்தி பலாத்காரம் செய்துள்ளான்.

பலாத்காரம் செய்த பின்னர் இது குறித்து யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி சென்றுள்ளான். இந்த நிலையில்., சிறுமியின் நடவடிக்கையில் இருக்கும் மாற்றத்தை அறிந்த பெற்றோர்கள்., உடனடியாக அவரிடம் விசாரணை செய்யவே., வீரபாண்டி பலாத்காரம் செய்ததை கூறி கதறியழுத்துள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே., இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர் வீரபாண்டியை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில்., இந்த கொடூரத்திற்கு வீரபாண்டியன் தாயார் மற்றும் அவரது உறவினர் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.