சர்ச்சைக்குரிய வைத்தியர் சிஹாப்தீனின் மனைவி சிக்கினார்!

சர்ச்சைக்குரிய வைத்தியர் சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபியின் மனைவியிடமும் விசாரணைகள் முன்னெடுகப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சிஹாப்தீன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் கடந்த 15 ஆண்டுகளாக சேர்த்த சொத்துகள் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த சர்ச்சைக்குரிய தம்பதியர் கடந்த 15 ஆண்டுகளாக வைத்திய தொழில் ஈடுபட்டு வந்தமை விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.

வைத்திய குடும்பத்தின் சொத்துக்கள் தொடர்பான விசாரணை உறுதி செய்யப்படும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக சொத்து குவிப்பு வழக்கு தாக்கல் செய்ய முடியும் என ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபியின் ஆயிரக்கணக்கான பெண்களுக்கு சட்டவிரோமான முறையில் குடும்ப கட்டுப்பாடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குற்றச்சாட்டு தொடர்பில் இதுவரையில் 429 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வைத்தியர் சியாப்தீன் மொஹமட் ஷாபியிடம் உரிய கணக்கு இல்லாத பில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் இருப்பதாக விசாரணைகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.