கனடாவின் வரலாற்றில் இதுவரை நடந்திராத அதிசயமாக ஒரே மேடையில் 1000 இற்கும் அதிகமான தமிழ் கலைஞர்கள் கலந்துகொள்ளும் பிரம்மாண்டமான நிகழ்வு இந்த மாதம் 29ம் திகதி டொரொன்டோ இல் நடைபெற இருக்கின்றது.
உலகம் முழுவதிலுமுள்ள பல்வேறு துறைசார்ந்த 1000 இற்கும் அதிகமான கலைஞர்கள், குறிப்பாக ஈழத்தமிழ் கலைஞர்கள் ஒரே மேடையில் தமது திறமைகளை அரங்கேற்றும் ‘IBC- தமிழா TORONTO 2019’ என்ற நிகழ்வு கனடா வாழ் மக்களைப் பொறுத்தவரை மிகப் பெரிய கொண்டாட்டம் என்று கூறுகின்றார்கள் கனடா வாழ் தமிழ் மக்கள்.
தமிழர்களின் கலைக்கான அங்கீகாரத்தை வழங்கும் ‘IBC-தமிழா TORONTO 2019 நிகழ்ச்சி தினம் நெருங்க நெருங்க பதட்டமாக இருப்பதாகவும், தமது அடுத்த தலைமுறை தமிழ் கலைகளை தமது இதயங்களில்சுமக்கின்ற அந்த அரங்கைக் காண்பதற்கு தாம் மிகுந்த ஆவலாக இருப்பதாகவும் தெரிவிக்கின்றார்கள் கனடா வாழ் ஈழத் தமிழ் மக்கள்.