பெரம்பலூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் திருட்டு சம்பவம் நடைபெற்று வருகிறது.
இருசக்கர வாகனத்தில் வரும் மர்ம நபர்கள், முகவரி கேட்பது போல் நடித்து பல்வேறு பகுதிகளில் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெரம்பலுரில் வடக்குமாதவி சாலையிலுள்ள, அசோக் நகரில் வசிப்பவர்கள் தினேஷ், அவரது மனைவி சத்தியபாமா (31). தினேஷ் ஆத்தூர்சாலையில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார்.
வீட்டில் தனியாக இருந்த நிறைமாத கர்ப்பிணியான சத்தியபாமா, வீட்டின்காம்பவுண்ட் சுவர் கேட்டை பூட்டி விட்டு சாவியை கணவர்வந்து திறந்து கொள்வதற்கு ஏதுவாக, பூட்டிலேயே வைத்து விட்டு, காற்றோட்டத்திற்காக வீட்டின் முன் பகுதியில் தூங்கியுள்ளார்.
இதனை சாதகமாக்கி கொண்ட கொள்ளையர்கள் சாவியை எடுத்து பூட்டை திறந்து, வீட்டினுள் சென்று பீரோவைஉடைத்து தலா ஒரு பவுன் கொண்ட இரண்டு மோதிரங்கள்,10 ஆயிரம் மதிப்புள்ள ஒரு வெள்ளி கொடி மற்றும் வெள்ளிபொருட்களை எடுத்துவிட்டு, சத்தியபாமாவின் கழுத்திலிருந்த 8 பவுன் தாலிச் செயினையும் பறித்துள்ளனர்.இ
தனால், திடுக்கிட்டு எழுந்த சத்தியபாமா சத்தம்போட்டுள்ளார். இதில் சுதாரித்துக் கொண்ட கொள்ளையர்கள்சங்கிலியை பறித்து கொண்டு, சத்தியபாமாவை கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த தினேஷ், மனைவி சத்தியபாமாவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல் மே 27 அன்று பெரம்பலூர் அருகே உள்ள நொச்சியம் கிராமத்தில் நைனாம்பாள் என்ற மூதாட்டியிடம் 6 பவுன் தங்க சங்கிலியை கொள்ளையர்கள் பறித்து சென்றுள்ளனர்.
தொடர் திருட்டு சம்பவங்களை திட்டமிட்டு செய்து வரும் கொள்ளையர்களை பிடிக்க முடியாமல் போலீசார் திணறுவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.