UEFA சாம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதி போட்டியில், மொடல் அழகி ஒருவர் திடீரென அரை நிர்வாணத்தில் ஓடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வரும் UEFA சாம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதி போட்டியில் லிவர்பூல் – டோட்டன்ஹாம் அணிகள் மோதின.
இந்த போட்டியின் போது, Kinsey Wolanski என்கிற மொடல் அழகி திடீரென கருப்பு நிறத்திலான அரை நிர்வாண ஆடையில் மைதானத்திற்குள் ஓடினார். இதனால் ஆட்டம் 20 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது.
இதனை பார்த்து விரைந்து சென்ற பொலிஸார் அந்த பெண்ணை கைது செய்தனர். பின்னர் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், காதலனின் ஆபாச இணையத்தளம் ஒன்றினை பிரபலப்படுத்துவதற்காகவே அந்த எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட ஆடையை அணிந்துகொண்டு ஓடியது தெரியவந்தது.
இதனை பார்த்த அவருடைய காதலன், “நான் உன்னை திருமணம் செய்ய காத்திருக்க முடியாது” என தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக Kinsey Wolanski-ன் காதலன் Vitaly Zdorovetskiy, 2014ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கிண்ண கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் இதே போல ஓடியது குறிப்பிடத்தக்கது.