நேசமணி சிலைக்கு அஞ்சலி செலுத்திய மக்கள்?

நகைச்சுவை நடிகர் வடிவேலு நடித்த கதாபாத்திரமான நேசமணிக்கு அடிபட்டுவிட்டதாகவும் அவருக்காக பிரார்த்திக்கும்படியும் வேடிக்கையாக சமூக வலைதளங்களில் துவங்கிய பிரசாரம் உலக அளவில் ட்ரெண்ட் ஆகியது.

நடிகர் வடிவேலு நடித்த படத்தின் கதாபாத்திரமான நேசமணியை தெரிந்த நமக்கு, கன்னியாகுமரி மாவட்டத்தை தமிழ்நாட்டோடு இணைப்பதற்கு பல போராட்டங்கள் நடத்தி கன்னியாகுமரியை தமிநாட்டோடு இணைத்த நேசமணியை நம் பற்றி இளைஞர்களுக்கு தெரிய வாய்ப்புயில்லை

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல்வாதியும், ‘குமரித் தந்தை’ என்று அழைக்கப்படுபவருமாகிய மார்சல் ஏ. நேசமணி இந்தியா விடுதலை அடைந்த பின்னரும், கேரளாவின் திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் இணைந்திருந்த கன்னியாகுமரி மாவட்டத்தை தமிழ்நாட்டோடு இணைப்பதற்கு பல போராட்டங்கள் நடத்தி 1956ம் ஆண்டு நவம்பர் முதலாம் தேதி குமரி, தமிழ்நாட்டோடு இணைக்கப்படுவதற்கு தலையேற்று பாடுபட்டவர் தான் நேசமணி.

மக்களுக்கு ஆற்றிய அரும்பணியால் மார்சல் நேசமணி அன்பாக அழைக்கப்பட்டார். மார்த்தாண்டத்திற்கு அருகில் இவரது பெயரில் பாலம் ஒன்று உள்ளது. நாகர்கோவிலில் கட்டப்பட்ட மார்ஷல் நேசமணி மணிமண்டபத்தினை 2014ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

தமிழ்நாட்டுடன் கன்னியாகுமரி மாவட்டம் இணைந்த நாளான நவம்பர் 1, அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஜூன் 1-ம் தேதியான இன்று ‘குமரித் தந்தை’ நேசமணியின் 51வது நினைவு நாள், அதனை முன்னிட்டு நாகர்கோவிலில் உள்ள மார்ஷல் நேசமணி மணிமண்டபத்தில் குமாரி மாவட்ட மக்கள் மற்றும் அரசியல்வாதிகள் என அனைவரும் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.