போட்டியில் தந்தையையே திருமணம் செய்து கொண்ட இளம்பெண்!

இரண்டு சகோதரிகளில் யார் தந்தைக்கு மிகவும் நெருக்கமானவர் என்ற போட்டியில் ஒரு இளம்பெண் சொந்த தந்தையுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

தாயுடன் வாழ்ந்து வந்த Samantha Kershner (21)க்கு தனது தந்தை யார் என்று அறியும் ஆசை ஏற்பட்டிருக்கிறது.

DNA பரிசோதனை மூலம் Nebraskaவைச் சேர்ந்த Travis Fieldgrove (40)தான் தனது தந்தை என்று அறிந்து கொண்டிருக்கிறார்.

மூன்று ஆண்டுகளுக்குப்பின், Samanthaவுக்கும் Travisக்கும் இடையில் பாலியல் ரீதியான உறவு ஏற்பட்டுள்ளதை அறிந்த அவரது தாயார் பொலிசாரிடம் புகாரளித்துள்ளார்.

உடனே தந்தையும் மகளும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். விசாரிக்கும்போது திருமண சான்றிதழில், Samantha பெயருக்கு பின்னால், தந்தை என்ற இடத்தில் Travis Fieldgroveஇன் பெயர் இல்லை என வாதிடப்பட்டிருக்கிறது.

என்றாலும் நீதிமன்றம் DNA பரிசோதனைக்கு உத்தரவிட, பரிசோதனையில் Travis Fieldgroveதான் Samanthaவின் தந்தை என்று கண்டறியப்பட்டிருக்கிறது. எனவே, பொலிசார் தந்தையையும் மகளையும் கைது செய்துள்ளனர்.

விசாரணையில் Travisஇன் மகளுக்கும் தனக்கும் யார் அவருக்கு நெருக்கமானவர் என்ற போட்டி ஏற்பட்டதாகவும், தான் தான் அவருக்கு நெருக்கமானவர் என்று நிரூபிக்கவே அவருடன் பாலுறவு வைத்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார் Samantha.

இந்த மனிதரால் சமுதாயத்திற்கு எந்த நன்மையும் இல்லை என கடினமான வார்த்தைகளால் Travisஐ விமர்சித்த நீதிபதி, அவருக்கு எட்டு மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து அதன்பின் ஓராண்டு பொலிஸ் கண்காணிப்பில் இருக்கவும் உத்தரவிட்டதோடு Samanthaவை சந்திக்கக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார்.

Samanthaவுக்கு இந்த மாதத்தில் பின்னர் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.