பொள்ளாச்சி அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், தனியார் பள்ளி ஆசிரியை தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பூபாலன் என்பவருடைய மகள் பிரதீபா (25). இவர் கோவையில் உள்ள தனியார் பள்ளியிக்கு சொந்தமான விடுதியில் தங்கி ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
இவர் கடந்த 5 வருடங்களாக வேற்று சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதலித்து வந்துள்ளார். இதற்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆனால் பிரதீபா அவரை திருமணம் செய்து வைக்குமாறு தன்னுடைய பெற்றோரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். இதனை ஏற்க மறுத்து அவருடைய பெற்றோர் வேகமாக மாப்பிள்ளை தேட ஆரம்பித்துள்ளனர்.
இதனால் சில நாட்களாகவே மனமுடைந்து காணப்பட்ட பிரதீபா, ஆள் இல்லாத சமயம் பார்த்து பள்ளி விடுதியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சக ஆசிரியைகள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், பிரதீபாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.