மிருகத்தனமாக கொலை செய்யப்பட்ட இளம்பெண்: கொதித்தெழும் இணையதளவாசிகள்

தென் ஆப்பிரிக்காவில் மார்பங்கங்கள் அறுத்து எடுக்கப்பட்டு கொடூரமான முறையில் 21 வயது இளம்பெண் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மே 19ம் திகதியன்று தென் ஆப்பிரிக்காவின் Dagbreek பகுதியில் இளம்பெண்ணின்ஒருவரின் சடலம் கிடப்பதாக அப்பகுதியை சேர்ந்தவர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், இளம்பெண்ணின் முகம் எரிக்கப்பட்டு கொடூரமாக சிதைக்கப்பட்டிருந்ததால் அடையாளம் காணமுடியாமல் தடுமாறினார்.

பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், 21 வயது நளடி லெத்தோபா என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக தற்போது பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வரும் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், நாங்கள் சென்று பார்த்த போது அந்த இளம்பெண்ணின் கழுத்தில் கத்தி சொருகியபடியே இருந்தது.

மார்பகங்கள் இரண்டும் அறுத்து எடுக்கப்பட்டு, கீழ் பகுதியும், முகமும் தீயினால் கொளுத்தப்பட்டிருந்தது. சந்தேக நபராக, லெத்தோபாவின் பள்ளியில் பயின்று வரும் 19 வயதான ஓபெட் லெசோரோ என்கிற மாணவரை கைது செய்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவமானது தென் ஆப்பிரிக்கா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், #justicefornaledi என்கிற ஹேஸ்டேக் மூலம் இணையதளவாசிகள் ட்விட்டரில் கொந்தளித்து வருகின்றனர்