மேடையில் வைத்து பெண்களுக்கு முத்தம் கொடுத்த அதிபர்!

நான் ஒரு ஓரினசேர்க்கையாளராக இருந்தேன் என பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபர் ரோட்ரிகோ டூர்ட்டே அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

ஜப்பானில் உள்ள பிலிப்பைன்ஸ் மக்களுடனான சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டூர்ட்டே ஓரினசேர்க்கை குறித்து கருத்து தெரிவித்தார்.

நான் ஒரு ஓரினசேர்க்கையாளராக இருந்ததால், அரசியலின் ஆரம்ப காலகட்டத்தில் என்னை பலரும் கேலி செய்தனர்.

என்னுடைய விமர்சகர் செனட்டர் அன்டோனியோ டிரில்லனஸ் IV, என்னை போலவே ஓரினசேர்க்கையாளர் என கூறுகின்றனர்.

நானும் அவரை போல தான். ஆனால் தற்போது ஒரு அழகிய பெண்ணால் நான் மாறிவிட்டேன் என தன்னுடைய முதல் மனைவியை குறிப்பிட்டார்.

மேலும், அதனை நிரூபிக்கும் விதமாக 4 பெண்களை மேடைக்கு அழைத்து தனக்கு முத்தம் கொடுக்குமாறு கூறினார்.