அடுத்தடுத்து தொடரும் தற்கொலைகள்! கல்லூரியில் நடக்கும் மர்மம் என்ன???

அண்மையில் கடந்த இரண்டு நாட்களாக பலரையும் அதிர்ச்சியாக்கிய செய்தி கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் தற்கொலை சம்பவம். காஞ்சிபுரம் மாவட்டம் கட்டாங்குளத்தூரில் உள்ள SRM பல்கலைகழகத்தில் தொடர்ந்து நான்கு நாட்களாக அடுத்தடுத்து தற்கொலை சம்பவங்கள் நடந்துள்ளன.

முதல் நாள் ஒரு மாணவி கல்லூரியின் 10 வது மாடியில் இருந்து தற்கொலை செய்திருகிறார், அடுத்த நாள் வேறொரு மாணவன் தற்கொலை செய்துள்ளார் . ஆனால் ஊடகங்கள் இதை பற்றி பெரிதும் பேசாதது பலருக்கு வருத்தமே.

அதே வேளையில் நேசமணியை உலகளவில் டிரெண்டாக்கி கொண்டாடியது வெட்கக்கேடான செயல் என பலரும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். இந்நிறுவனத்தின் நிறுவனர் பாரிவேந்தர் அண்மையில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்டு MP ஆக வெற்றி பெற்றவர்.

தற்போது தொடர் தற்கொலைகளால் சர்ச்சையில் சிக்கியுள்ளார். உண்மைமையை ஏன் மூடி மறைக்கிறார்கள், மர்மம் என்ன என சமூகவலைதளங்களில் பலரும் விமர்சனம் எழுந்துள்ளது. நடிகை கஸ்தூரியும் இதுகுறித்து கேள்வி எழுப்ப சிலர் அதற்கு பதிலளித்துள்ளார்கள்.