இரவு படுத்து தூங்கிவிட்டு காலையில் எழுந்து பார்க்கும் போது நம்முடைய தொப்பை காணாமல் போயிருந்தால் எப்படி இருக்கும்.
அது நடக்க வேண்டும் என்றால் ஒரு நாள் மாத்திரம் ஜூஸ் மற்றும் க்ரீன் டயட்டை மட்டும் செய்தாலே போதும். நிச்சயம் ஒரே இரவில் உங்க தொப்பை காணாமல் போயிடும்.
இரவே தொப்பை கரையுமா?
அப்படி எப்படி ஒரே ராத்திரியில தொப்பை குறையும். அப்படி எப்படி ஒரு மேஜிக் நடக்கும் என்று நீங்கள் நினைக்கலாம்.
இந்த க்ரீன் டீ, ஜூஸ் டயட் இருக்கிறதல்லவா இதை முறையாக ஒரு நாள் முழுக்க சாப்பிட்டு வந்தால் மேஜிக் ஏதும் இல்லாமல் அறிவியல் முறைப்படியே உங்களுடைய தொப்பையை எளிதாகக் குறைத்து விட முடியும்.
ஜூஸ், க்ரீன் டீ டயட்டும்
ஒரு நாள் சாப்பாடே இந்த க்ரீன் டீயும் ஜூஸ் மட்டும் தான். இந்த ஜூஸையும் க்ரீன் டீயையும் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறையும் முறையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
எந்தெந்த நேரத்தில் என்னென்ன ஜூஸை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பார்க்கலாம்.
அப்படி எடுத்துக் கொள்வதால் நம்முடைய உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களை எரிக்க உதவும்.
காலை எட்டு மணி
மணி இந்த டயட்டை தூங்கி எழுந்ததும் காலை எட்டு மணிக்குத் தொடங்க வேண்டும். எட்டு மணிக்கு ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் அரை எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்து அதில் கலந்து சிறிது உப்பு சேர்த்து குடிக்க வேண்டும்.
பத்து மணி
எலுமிச்சை சாறு குடித்து முடித்து இரண்டு மணி நேரம் கழித்து, முன்பைப் போல ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் அரை ஆரஞ்சு பழத்தின் சாறு அல்லது ஆப்பிள் சாறு பிழிந்து உப்பு சேர்த்தோ அல்லது அப்படியேவோ குடிக்கலாம்.
மதியம் 12 மணி
ஆரஞ்சு ஜூஸ் குடித்து இரண்டு மணி நேரம் கழித்து, ஒரு கப் க்ரீன் டீயில் எலுமிச்சை சாறும் ஒரு ஸ்பூன் தேன் கலந்து பருகுங்கள்.
மதியம் 1 மணி
க்ரீன் டீ குடித்து ஒரு மணி நேரம் கழித்து, மதியம் ஒரு மணி அளவில், முக்கால் கிளாஸ் குளிர்ந்த நீரில் கால் டம்ளர் அளவுக்கு கேரட் ஜூஸைக் கலந்துக் குடியுங்கள்.
மதியம் 3 மணி
கேரட் ஜூஸ் குடித்து இரண்டு மணி நேரம் கழித்து, உங்களுக்கு விருப்பமான (புதினா டீ, இஞ்சி டீ, மசாலா டீ, மூலிகை) என பால் சேர்க்காத உங்களுக்கு விருப்பமான டீயில் ஒன்றை மூன்று மணி அளவில் குடியுங்கள்.
மாலை 5 மணி
உங்களுக்கு விருப்பமான டீயைக் குடித்து இரண்டு மணி நேரம் கழித்து, மாலை 5 மணியளவில் உங்களுக்கு விருப்பமான ஏதேனும் ஒரு பழத்தின் ஜூஸைப் பருகலாம். (மாதுளை, ஆரஞ்சு, பேரிக்காய், திராட்சை, ஆப்பிள்) என எந்த பழமாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
மாலை ஏழு மணி
ஏழு மணிக்கும் இன்னைக்கு ஒரு நாள் க்ரீன் மட்டும் தான் குடிக்கணும்.
இரவு 9 மணி
ஒன்பது மணி ஆனதுக்குப் பிறகு ஒரு கிளாஸ் தண்ணீரில் அரை கிரேப் ஃப்ரூட் சாறெடுத்து கலந்து குடிக்க வேண்டும்.
இரவு 10 மணி
இரவு பத்து மணியோடு டயட்டை முடித்துக் கொள்ளும் நேரம் வந்துவிட்டது. ஒரு டம்ளர் தண்ணீரோடு இந்த நாள் டயட்டை முடித்துக் கொள்ளுங்கள். நன்கு பெரிய கிளாஸில் தண்ணீரைக் குடித்து விட்டு, படுத்து நன்கு தூங்குங்கள்
அளந்து பாருங்கள்
படுத்து இரவு முழுக்க தூங்கிவிட்டு, காலையில் தூங்கி எழுந்ததும், ஒரு டேப்பை எடுத்து அளந்து பாருங்கள். கண்ணாடி முன்னால் நின்று பாருங்கள். உங்களிடம் இருந்த உங்கள் தொப்பை உங்களுடைய கண்முன்னே காணாமல் போயிருக்கும்.