பல வருடங்களாக சினிமாவில் பாடி வருபவர் பாடகி சைந்தவி. இவருக்கும் இசையமைப்பாளர் நடிகர் ஜி.வி.பிரகாஷிற்கும் கடந்த 2013ஆம் ஆண்டு காதல் திருமணம் நடந்தது.
இவர்கள் இருவரும் இணைந்து பல பாடல்கள் பாடியுள்ள நிலையில் இணைந்து நடிப்பீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த சைந்தவி, நடிப்பு, பாடல் என அவர் பிஸியாக இருப்பதை என் கண் முன்னே பார்க்கிறேன்.
இரவு, பகலாக தூக்கமில்லாமல் அவர் உழைத்து கொண்டிருப்பதை என்னால் பார்க்க முடிகிறது. அவரை போல என்னால் ஓட முடியுமா என்று தெரியவில்லை. கூடவே, எனக்கு கேமரா என்றாலே பயம். இதில் எங்கே நடிப்பது. நிச்சயம் அவருடன் இணைந்து நடிப்பது சாத்தியமில்லாததுதான் என்கிறார்.