சீமான் தான் முதல்வர்.. கமலை வீழ்த்துவார் ரஜினி: தயாரிப்பாளர் ஓபன் டாக்

2031-ல் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழ்நாட்டின் முதல்வர் என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.

நேர்காணல் ஒன்றில் பேசிய சுரேஷ் காமாட்சி கூறியதாவது, சீமான் தமிழ் தேசியம் ஆரம்பித்துள்ளார். இதை சீமானால் அறுவடை செய்ய முடியாவிட்டாலும், சீமான் தொடங்கிய கட்சி அறுவடை செய்யும், இது மக்களுக்கான அரசியல் தான்.

அடுத்த தேர்தலில் நாம் தமிழர் தனித்து போட்டியிடும் அதிக வாக்குகளை பெரும். ஆனால், அடுத்த தேர்தலிலே சீமான் முதல்வராக வாய்ப்பில்லை, அடுத்த பத்து ஆண்டுகளில் சீமான் முதல்வர் ஆவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

நாம் தமிழர் கொள்கை மக்களிடம் சேரும் வரை நாம் காத்திருப்போம், அதற்காக கூட்டணி வைக்கமாட்டோம், மக்கள் என்று எங்களை புரிந்துக்கொள்கிறார்களோ அன்று ஓட்டு போடட்டும்.

கமல் 50 வருடங்களாக சினிமாவில் உள்ளார். அவரின் புகழ் வெளிச்சம் காரணமாகவே அவருக்கு 3 சதவீத வாக்கு கிடைத்தது. அடுத்த சட்டமன்ற தேர்தலில் அவருக்கு இதே நிலையான வாக்கு கிடைக்குமா என்று பார்ப்போம்.

ரஜினி தேர்தலில் போட்டியிட்டால் கமலை விட அதிக வாக்கு பெறுவார். ரஜினி வந்தால் வாக்குகள் கண்டிப்பாக பிரியும், ஆனால், இதனால் நாம் தமிழர் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை. நாம் தமிழர் கட்சியில் உள்ளவர்கள் கொள்கையின் அடிப்படையில் வந்தவர்கள், காசு, பணம், பதவிக்காக வரவில்லை என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.