சீமானின் நாம் தமிழர் கட்சியின் உண்மை முகம் அம்பலமா?

நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடந்த பொதுக் கூட்டத்தில், கட்சியைச் சேர்ந்த சிலர் பணம் வசூலித்த புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் ஒரு வளர்ந்து வரும் கட்சியாக நாம் தமிழர் கட்சி உள்ளது. சமீபத்தில் நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் கூட நாம் தமிழர் கட்சி சில இடங்களில் மூன்றாவது இடங்களைப் பெற்றது.

அப்படி மாபெரும் கட்சியாக தமிழகத்தில் உருவெடுத்து வருகிறது.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் ஒன்றின் போது, இடையில் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலர் அங்கு உட்கார்ந்திருக்கும் மக்களிடம் பணம் வசூலிப்பதாகவும், அதுவும் ஒரு 20 லிட்டர் வாட்டர் கேன் ஒன்றில் நாம் தமிழர் கட்சியின் எழுச்சி கூட்டம் உண்டியல் என்று எழுதப்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

அப்படி வசூலிக்கப்பட்ட நிலையில் இருக்கும் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் நிற்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைக் கண்ட இணையவாசிகள் இது தான் நாம் தமிழர் கட்சியின் உண்மை முகம், பணம் வசூலிப்பதற்காகவே பல இடங்களில் தொடர்ந்து பேசி வருகின்றனர் என்று குறிப்பிட்டு வருகின்றனர்.

இதற்கு சீமான் விளக்கம் கொடுத்தால் மட்டுமே இது முடிவுக்கு வரும்.