இந்தியாவில் 100 பெண்களை பலாத்காரம் செய்வேன் என்று சபதம் எடுத்த இளைஞரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலம், கோட்டயத்தை சேர்ந்த திருமணமான இளம்பெண் ஒருவர், சில தினங்களுக்கு முன் அங்கிருக்கும் காவல்நிலையம் ஒன்றில் புகார் அளித்திருந்தார்.
அதில், ஒரு வாலிபர் எனது புகைப்படத்தை மார்பிங் செய்து நிர்வாணமாக்கி, அந்த ஆபாச படத்தை என் கணவருக்கு அனுப்பி விடுவதாக மிரட்டி, என்னை பலமுறை பலாத்காரம் செய்தார். இதனால் அவரை கைது செய்ய வேண்டும் என்று புகார் மனு அளித்திருந்தார்.
இதையடுத்து இளம் பெண்ணை ஏமாற்றி பலாத்காரம் செய்த நபரை பிடித்து பொலிசார் விசாரித்த போது, அந்த நபரின் பெயர் பிரதீஷ் குமார்(25) எனவும், அவர் கோட்டயம் அரிப்பரம்பு பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.
இதைத் தொடர்ந்து பொலிசார் அவனிடம் நடத்திய விசாரணையில், அவன் முதலில் தன்னுடைய வலையில் வீழ்த்தவேண்டிய பெண்களை தேர்ந்தெடுப்பார்.
பெரும்பாலும் திருமணமான பெண்களுக்கே குறி வைப்பார். பின்னர், வலிய சென்று நட்பை ஏற்படுத்தி கொண்டு, போன் நம்பரையும் வாங்கி கொள்வார். அந்த பெண்ணிடம் சகஜமாக பேசி குடும்ப பிரச்னைகளை தெரிந்து கொள்வார்.
அதன் பின் அவரது கணவருக்கு மற்ற பெண்களுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக கூறி ஏமாற்றுவார்.
இதற்காக பிரதீஷ் குமார் பெண்கள் பெயரில் பேஸ்புக்கில் போலி கணக்கை தொடங்கி, அதில் இருந்து தான் பேசி வரும் பெண்களின் கணவருடன் சாட்டிங் செய்வார்.
இந்த சாட்டிங்கை ஸ்கிரீன் ஷாட் எடுத்து இளம்பெண்ணுக்கு அனுப்பி வைப்பார். இதை பார்த்ததும் தனது கணவனுக்கு வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பதாக இளம்பெண் கருதுவார்.
இதனால் அவர்களின் குடும்பத்தில் பிரச்சனை ஏற்படும். இதை பயன்படுத்தி அந்த பெண்ணுடன் பிரதீஷ் குமார் நெருக்கமாவார்.
இதைத் தொடர்ந்து அந்த பெண்ணுடன் அவர் வீடியோ சாட்டிங் செய்வார். அப்போது அந்த பெண்ணின் புகைப்படத்தை பதிவு செய்து வைத்துக் கொள்ளும் அவர், அந்த புகைப்படங்களை மார்பிங் செய்து நிர்வாண படமாக்குவார்.
நிர்வாண படமாக்கப்பட்ட அந்த படத்தை அவரது கணவருக்கு அனுப்பி வைப்பதாக கூறி இளம்பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்வார்.
இப்படி கடந்த 2 வருடங்களில் இவர் 50-க்கும் மேற்பட்ட பெண்களை பலாத்காரம் செய்துள்ளார். சமீபத்தில் இவரது வலையில் சிக்கிய ஒரு பெண்ணிடம், நீ எனக்கு 68வது ஆள். 2021க்கு முன் 100 பெண்களை சீரழிப்பேன் என்று சபதம் எடுத்துள்ளேன் என்று கூறியுள்ளார்.
அவனது லேப்டாப்பை சோதனை செய்த போது, 60 பெண்களின் மார்பிங் செய்யப்பட்ட நிர்வாண புகைப்படங்கள் இருந்ததை பொலிசார் கண்டுபிடித்தனர். கைது செய்யப்பட்ட விசாரணைக்குபின் பொலிசார் பிரதீஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இது தொடர்பாக பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.