உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் எந்தெந்த அணிகள் எத்தனை ஆட்டங்களில் வெற்றி பெறும் என்பது குறித்து, நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பிரண்டன் மெக்கல்லம் ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளார்.
12வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், ஒவ்வொரு அணி எத்தனை வெற்றிகளை பெறும் என்ற தனது கணிப்பை, பிரண்டன் மெக்கல்லம் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இங்கிலாந்து அணி 9 லீக் போட்டிகளில் 8 வெற்றிகளை பெறும் என்றும், அவுஸ்திரேலியாவிடம் மட்டும் தோற்கும் என்றும் தெரிவித்துள்ளார். இந்திய அணி 8 போட்டிகளில் வெற்றி பெற்று, இங்கிலாந்திடம் ஒரு போட்டியில் தோற்கும்.
நடப்பு சாம்பியனான அவுஸ்திரேலிய அணி 6 வெற்றிகளை பெறும் என்றும், இந்தியா, அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதியை சிக்கல் இன்றி எட்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
4வது அணியாக அரையிறுதியில் நுழைய நான்கு அணிகள் முட்டிமோதும். அதாவது பாகிஸ்தான், நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தலா 5 வெற்றிகளை பெறும் என்றும், அந்த அணிகள் 4 தோல்விகளை பெற்று ரன்ரேட் அடிப்படையில் நியூசிலாந்து அரையிறுதிக்கு தகுதி பெறும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கை, வங்கதேச அணிகள் தலா ஒரு வெற்றியையும், ஆப்கானிஸ்தான் 2 வெற்றிகளையும் பெறும் என்றும் அவர் கணித்துள்ளார்.