இந்த உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான பல தொடர் அநீதிகள் நடைபெற்று வருகிறது. அவர்களுக்கு நடைபெறும் அநீதிகள் அவருக்கு நன்கு தெரிந்த மற்றும் உடன் பழகிய நபர்களாலேயே இழைக்கப்பட்டு வருகிறது. பெண்களை மயக்கி., அவர்கள் நம்பும் அளவிற்கு தங்களின் பேச்சாற்றால்., அவர்களின் வாழ்க்கையை அளித்து வரும் கொடூர எண்ணங்களால் பல துயரங்கள் அரங்கேறி வருகிறது.
கேரள மாநிலத்தில் உள்ள கோட்டயம் மாவட்டதிற்கு அருகேயுள்ள அரிபரம்பு பகுதியை சார்ந்தவன் சதீஷ் குமார் (வயது 25). இவன் சமூக ஊடகங்கள் மற்றும் இணையதளங்கள் மூலமாக பெண்களிடம் பழகி சுமார் 50 க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் ஆனது தற்போது வெளிவந்துள்ளது.
இவனை கைது செய்த காவல்துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொள்கையில்., இவன் அளித்த வாக்குமூலத்தை கண்டு அதிர்ச்சியுற்றுள்ளனர். அந்த வாக்குமூலத்தில் அவர் தெரிவித்ததாவது., கொடூரன் பிரகதீஷ்குமார் திருமணமான பெண்களை குறிவைத்து அவர்களை இணையதளங்கள் மூலமாக பழக்கத்தை ஏற்படுத்தி அவர்களிடம் பேசி வந்துள்ளான்.
இது மட்டுமல்லாது இவர்களின் கணவர்களின் முகநூல் பக்கத்தில் மற்றொரு பெண் கணக்கின் மூலமாக தன்னை பெண்ணாக அறிமுகப்படுத்திக்கொண்டு., அவர்களிடமும் பேசி வந்துள்ளான். இந்த நிலையில்., அந்த பெண்ணின் கணவரிடம் பேசும் சமயத்தில்., பெண்ணாக இருந்த ஆபாசமாக பேசி., பின்னர் அவர்களிடமிருந்து ஆபாச புகைப்படங்களை அனுப்பி பெற்று வந்துள்ளான்.
இந்த செயலை புகைப்படம் எடுத்து அவர்களின் மனைவிக்கு அனுப்பி வைத்து இது போன்று உங்கள் கணவர் பிற பெண்களுடன் தொடர்பில் உள்ளார் என்ற செய்தியைக் கூறி அவர்களை நம்ப வைத்து., அவர்களுக்கு ஆதரவு அளிப்பது போல் அவர்களின் புகைப்படங்களை பெற்று பின்னர் அதனை மாபிங் செய்து அவர்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளான்.
இது தொடர்பான தொடர் புகார்கள் காவல் துறையினருக்கு வந்ததையடுத்து., காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் இந்த அதிர்ச்சி சம்பவமானது வெளிவந்துள்ளது. மேலும்., இவனது பிடியில் சிக்கி சுமார் 50 பெண்கள் பாதிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பான விசாரணையில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.