இளவரசி மேகன் இப்படிப்பட்டவரா… நான் அப்படி சொல்லவே இல்லையே: பல்டியடித்த டிரம்ப்

பிரித்தானியா இளவரசி மேகனை பற்றி நான் தவறாக சொல்லவே இல்லை என அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், 2016 ஆம் ஆண்டு டிரம்பை, மேகன் மார்க்கெல் விமர்சித்தது பற்றி அவரிடம் கருத்து கேட்க்கப்பட்டது. இதற்கு பதிலளித்த டிரம்ப், மேகன் மார்க்கெல் மோசமானவர் என்று எனக்குத் தெரியாது என கூறினார்.

இளவரசி மேகன் குறித்த டிரம்பின் கருத்து ஊடகங்களில் செய்தியாக வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில், சர்ச்சை குறித்து டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்து பதிவிட்டுள்ளார்.

அதில், மேகன் மோசமானவர் என்று நான் ஒருபோதும் கூறவில்லை. போலி செய்தி ஊடகங்களால் தயாரிக்கப்பட்டது இது, தற்போது அவர்கள் பிடிபட்டுள்ளனர். இதற்காக ஊடகங்கள் மன்னிப்பு கோருமா? சந்தேகம் தான் என டிரம்ப் பதிவிட்டுள்ளார்.