தெலுங்கானாவில் செல்போனில் படம் பிடித்துக்கொண்டிருந்த போது மச்சினிகளுடன் குளியல் போட்டு கொண்டிருந்த இளைஞர் உள்பட 3 பேர் நீரில் மூழ்கி இறந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த அவினாஷ், கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பாக திவ்யா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
ஐதராபாத்தில் வசித்து வரும் இருவரும் சில நாட்களுக்கு முன்பு திவ்யாவின் தாய் வீட்டிற்கு வந்துள்ளனர்.
அங்கு தன்னுடைய மனைவி மற்றும் இரண்டு மச்சினிகள் சங்கீதா, சுமலதா ஆகியோருடன் நர்மதா ஆற்றின் பொம்மக்கூறு அணை கால்வாய் அருகே சென்றுள்ளார்.
கரையோரத்தில் நின்று திவ்யா வீடியோ எடுக்க, அவினாஷ் தன்னுடைய மச்சினிகளுடன் தண்ணீரில் இறங்கி விளையாட ஆரம்பித்துள்ளார்.
அப்போது திடீரென அவினாஷ் நீருக்குள் மூழ்கியுள்ளார். அவரை காப்பாற்ற முயன்ற சங்கீதா, சுமலதா இருவரும் அடுத்தடுத்து நீருக்குள் மூழ்கியுள்ளனர்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த திவ்யா, உதவி கேட்டு கூச்சலிட ஆரம்பித்துள்ளார். சத்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள் கணவாயில் இறங்கி மூன்று பேரையும் சடலங்களாக மீட்டெடுத்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.