பரபரப்பான ஆட்டத்தில் போராடி வீழ்ந்தது தென்னாப்பிரிக்கா!

உலகக் கோப்பை போட்டியின் இன்றைய லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய சௌமியா சர்க்கார், தமீம் இக்பால் ஓரளவு சிறப்பான தொடக்கத்தை அளித்தார்கள். தமீம் இக்பால் 16 ரன்களும், சவுமியா சர்க்கார் 42 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

ஷாகிப் அல் ஹசன் 84 பந்துகளில் 8 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 75 ரன்களையும், முஷ்பிகுர் ரஹீம் 80 பந்துகளில் 8 பவுண்டரிகள் உடன் 78 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். முகமது மிதுன் 21 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 21 ரன்களையும், மகமதுல்லா 33 பந்துகளில் 3 பவுண்டரி ஒரு சிக்சருடன் 46 ரன்களையும், மேசடக் ஹுசைன் 20 பந்துகளில் 4 பவுண்டரி உடன் 26 ரன்களையும், குவித்தனர்.

தென் ஆப்பிரிக்க அணிக்கு பின்னடைவாக உதிரி வகையில் 21 ரன்களை வாரி வழங்கி இருந்தார்கள். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு வங்கதேச அணி 330 ரன்கள் குவித்து தென் ஆப்பிரிக்க அணிக்கு ஒரு இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது.

331 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய தென் ஆப்பிரிக்க அணிக்கு அனைத்து வீரர்களுமே முடிந்தவரையில் சிறப்பான பங்களிப்பை அளிக்க முயற்சி செய்தார்கள். ஆனால் போதுமான அளவில் ரன்கள் எடுக்கும் முன் துரதிர்ஷ்டவசமாக ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்கள்.

முதல் விக்கெட்டாக சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த குயின்டன் டி காக் தேவையில்லாமல் 23 ரன்களில் ரன் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அதேபோல சிறப்பாக விளையாடிய மார்க்ரம் 46 ரன்களும், கேப்டன் டூபிளேஸிஸ் 62 ரன்களும், டேவிட் மில்லர் 38 ரன்களும், வான்டர்சன் 41 ரன்களும், டுமினி 45 ரன்களும் எடுக்க இறுதிக்கட்டத்தில் டுமினி அணியை காப்பாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் போல்ட் ஆகி வெளியேறினார்.

இறுதிவரை போராடிய தென்னாப தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 309 ரன்கள் மட்டுமே எடுத்து 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. வங்கதேச அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய முஸ்தபிசுர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளையும், ஷிபியூடின் 2 விக்கெட்டுகளையும், ஷாகிப் அல் ஹசன், மெஹைடி ஹசன் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள். உலக கோப்பையில் தென்ஆப்பிரிக்கா அணியை வங்கதேசம் வீழ்த்துவது இரண்டாவது முறையாகும். ஏற்கனவே