5 குழந்தைகளை பெற்று ஒரு குழந்தையை மட்டுமே வீட்டிற்கு எடுத்து வந்த தாய்!

தனக்கு பிறந்த 5 குழந்தைகளை நான்கு குழந்தைகளை மருத்துவமனையில் பறிகொடுத்தது குறித்து அவுஸ்திரேலிய தம்பதி மனம் திறந்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவை சேர்ந்த முன்னாள் ரக்பி விளையாட்டு வீரரான டீன் மும், சாரா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இந்த தம்பதியினருக்கு சோஃபி, ஹென்றி, இரட்டையர் எல்லா மற்றும் கிரேஸ் என 4 குழந்தைகள் பிறந்த சில மணி நேரங்களில் இறந்துவிட்டார்கள்.

இந்த சோகமான சம்பவம் குறித்து தம்பதியினர் முதன்முறையாக மனம் திறந்துள்ளனர். இதுகுறித்து பேசிய சாரா, 2012ம் ஆண்டு முதன்முறையாக கர்பமடைந்தேன். நாங்கள் இருவரும் மகிழ்ச்சியாக இருந்தோம். 20 வாரங்கள் முடிந்த போது, ஸ்கேன் செய்து பார்த்தோம். குழந்தை நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் கூறினார்கள்.

ஆனால் அடுத்த ஒரு வாரத்தில் திடீரென ரத்தப்போக்கு ஏற்பட்டது. வேகமாக மருத்துவமனைக்கு சென்றோம். குழந்தை வேகமாகவே பிறந்து இறந்தது.

6 மாதம் கழித்தது மீண்டும் கர்பமடைந்தேன். 28 வாரங்கள் வரை எல்லாம் நன்றாக சென்றுகொண்டிருந்தது. அதேபோல திடீரென ஒருநாள் அதிக ரத்தப்போக்கு மருத்துவமனை சென்று சோதனை மேற்கொண்ட போது, நச்சுக்கொடி இறக்கம் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.

அதிகம் போராடினோம். ஆனால் உள்ளிருந்த குழந்தை பலவீனமாக இருந்தது. அடுத்த சில மணிநேரங்களில் எனக்கு பிரசவம் நடைபெற்றது.

9 நாட்கள் கழித்து அவனும் இறந்துவிட்டான். ஒரு நாள் நிச்சயமாக நல்ல முறையில் எங்களுக்கு குழந்தை பிறகும் என்கிற நம்பிக்கை இருந்தது. பல மருத்துவர்களை சந்தித்து எனக்கான சிகிச்சையை பெற்று வந்தேன்.

அதன்பிறகு மீண்டும் கர்பமடைந்தேன். இரண்டு வாரத்திற்கு ஒரு முறை என தொடர்ந்து ஸ்கேன் செய்து பார்த்து வந்தேன்.

36 வாரங்கள் கழித்து எனக்கு குழந்தை பிறந்தது. 24 மணி நேரம் இன்குபேட்டரில் வைத்திருந்தனர். அதன்பிறகு 5 நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்திருந்தனர். இறுதியில் பத்திரமாக குழந்தையுடன் மருத்துவமனையிலிருந்து வெளியேறினோம்.

ஆல்பிக்கு 2 வயது நடந்துகொண்டிருக்கும் போது மீண்டும் கர்ப்படைந்தேன். இந்த முறை இரட்டை குழந்தைகள். ஆனால் அவர்கள் இருவரும் மோனோகோரியானிக் நஞ்சுக்கொடியை பகிர்ந்துகொண்டனர். இதனால் அந்த குழந்தைகளும் இறந்துவிட்டன என வேதனை தெரிவித்துள்ளார்.