இலங்கை அணி எதர்வரும் உலகக்கோப்பை போட்டிகளில் வெற்றிப்பெற இலங்கை ஜம்பவான் மஹேல ஜெயவர்தன ஆலோசனை வழங்கியுள்ளார்.
இலங்கை அணி தனது முதல் உலகக்கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணியிடம் படுதோல்வியடைந்தது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த மஹேல ஜெயவர்தன, இனி வரும் போட்டிகளில் இலங்கை அணி விக்கெட்டுகளை கைப்பற்றி எதிர் அணிக்கு நெருக்கடி நிலையை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.
அடுத்த போட்டி முக்கியமான போட்டி, நான்கு, ஐந்து போட்டிகளில் வெற்றிப்பெற்றால் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறலாம். ஆப்கானிஸ்தான் உடனான போட்டி இலங்கைக்கு நல்ல வாய்ப்பு.
அதே சமயம், அவர்களை எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது, ஆப்கானிஸ்தான் அணியும் வல்லமைமிக்க அணி. இலங்கை வீரர்கள் தங்களின் திறன் மீது நம்பிக்கையாக உணர வேண்டும் என மஹேல ஜெயவர்தன ஆலோசனை வழங்கியுள்ளார்.