அமெரிக்காவில் இளம் வயது தாய் ஒருவர் தன் குழந்தையின் வாயில் திடீரென்று தோன்றிய அடையாளத்தைக் கண்டு பதறி போய் மருத்துவமனைக்கு சென்ற நிலையில், அது கடைசியில் என்ன என்பது தெரியவந்தது பலருக்கும் சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் வாஷிங்டன் பகுதியைச் சேர்ந்தவர் டேரியன் டீபிரிட்டா. இவர் கடந்த 31-ஆம் திகதி பேஸ்புக்கில் போட்ட ஒரு பதிவு தான் இப்போது வைரல்.
அதில், நான் என் குழந்தை பெல்லாவுடன் விளையாடிக் கொண்டிருந்தேன். அப்போது அவளது மேற்பகுதியில் உள்ள வாயில் ஏதோ கருப்பு நிறத்தில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.
இதனால் அது என்ன என்று எடுக்க முயன்ற போது, அது கையில் வரவில்லை. உடனே அச்சமடைந்த நான் எனது தாய் சாண்ட்லரை வரவழைத்தேன்.
இதனிடையே மருத்துவரின் அப்பாயின்ட்மென்ட்டையும் வாங்கி விட்டேன். பின்னர் என் அம்மாவுடன் எனது குழந்தையை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றேன். அப்போது அங்கிருந்த செவிலியரும் அது என்ன என்று பார்த்த போது ஒன்றும் புரியவில்லை.
இதையடுத்து இது பிறந்த போதிலிருந்தே இக்குழந்தைக்கு அடையாளம் இருந்திருக்கலாம் என செவிலியர் தெரிவித்தார்.
ஆனால் நானோ தினமும் எனது குழந்தையின் வாயை துடைத்து வருவதால் இது போன்ற அடையாளத்தை அவர் பிறந்ததிலிருந்து நான் பார்த்ததில்லை என்றேன்.
உடனே அவரும் என் குழந்தையை சோதிக்க இரு மருத்துவர்களை வரவழைத்தார். மருத்துவர்களோ இது மெடிக்கல் மிராக்கிள் என தெரிவித்தார்.
ஆனால் நானோ அந்த கருப்பு பகுதியின் ஓரத்தில் வெள்ளையாக காகிதம் போல் இருப்பதை கண்டேன். உடனே அவள் எதையோ விழுங்க நினைத்த போது மேல்வாயில் ஓட்டிக் கொண்டதை அறிந்தேன்.
பின்னர் அதை சுரண்டி எடுத்த போதுதான் அது அட்டை என்பது தெரியவந்தது. ஒன்றுமே இல்லாத விஷயத்துக்கு இத்தனை ஆர்ப்பாட்டம் செய்ததை நினைத்து என்னால் சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை.
அதிலும் மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடியாததை நான் கண்டுபிடித்துவிட்டேன். என் மகள் பெல்லாவுக்கு தரையில் கிடக்கும் பொருட்களை வாயில் போடும் பழக்கம் உள்ளது, அதுவே காரணமாக இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.