அமெரிக்கா-ஈரான் இடையே போர் பதற்றம்.. உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்தது ஈரான்

அமெரிக்கா-ஈரான் நாடுகளுக்கு இடையில் மோதல் எதாவது ஏற்பட்டால் பெட்ரோல் ஒரு பீப்பாயின் விலை 100 டாலர்களுக்கும் மேல் உயர்த்தப்படும் என உலக நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மத்திய கிழக்குப் பகுதிகளில் போர் உருவாகும் சூழ்நிலை நிலவி வரும் நிலையில், ஈரான் தலைவர் அயதுல்லா அலி காமேனி அரசாங்கத்தின் உயர் ராணுவ அதிகாரியான யாஹ்யா ரஹீம் சஃபாவி கூறியதாவது, ஈரான் ஏவுகணைகள் தாக்கும் தொலைவில்தான் அமெரிக்க ராணுவ வாகனங்கள் உள்ளன தங்கள் படையின் முழுமையான பலம் என்னவென்று அமெரிக்காவுக்கு நன்றாகத் தெரியும்.

காவலர்களின் நிலத்திலிருந்து கடலை நோக்கி ஏவுகணைகள் தாக்கும் தொலைவில்தான் அமெரிக்க ராணுவ வாகனங்கள் உள்ளது என்பதும் பாரசீக வளைகுடாவில் நிலைகொண்டுள்ள அமெரிக்க மற்றும் வெளிநாட்டு கடற்படையினருக்கும் நன்கு தெரியும்.

பாரசீக வளைகுடாவில் முதல் புல்லட் சுடப்படும்போது எண்ணெய் விலை 100 டாலருக்கும் மேலாக உயரும். இது அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா நட்பு நாடுகளான ஜப்பான் மற்றும் தென் கொரிய நாடுகளுக்கு தாங்க முடியாததாக இருக்கும் ரஹீம் சபாவி தெரிவித்துள்ளார்.