அத்துரலிய ரத்ன தேரருக்கு ஆதரவாக களத்தில் குதித்த முஸ்லிம் வர்தகர்கள்!

அத்துரலிய ரத்ன தேரருக்கு ஆதரவாக மாத்தளை ரத்தோட்டை நகரில் முஸ்லிம் வர்தகர்கள் இன்று அனைத்து கடைகளும் மூடப்பட்டு, மக்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்துடன், தனியார் பேருந்து உரிமையாளர்களும் இன்று சேவையிலிருந்து விலகி, தேரருக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீன், ஆளுநர்களான அஸாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லா ஆகிய மூவரையும் உடனடியாக பதவி நீக்குமாறு கோரி அத்துரலிய ரதன தேரரால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் இன்று மூன்றாவது நாளாக தொடர்கின்றது.

இந்த நிலையில் அவருக்கு ஆதரவு தெரிவித்து நாட்டின் பல பகுதிகளிலும் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதனோர் அங்கமாகவே ரத்தோட்டை நகரில் இன்று அனைத்து கடைகளையும் மூடி போராட்டம் இடம்பெற்றது.