தென்னிந்திய முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. கடந்த 2017ல் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டவரின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த சூப்பர் டீலக்ஸ், மஜிலி திரைப்படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.
இதனால் சமந்தா தனது சம்பளத்தை கணிசமாக உயர்த்தியுள்ளார். மாமனார் நாகார்ஜூனாவின் மன்மதுடு-2வில் நடித்துவரும் இவருக்கு அப்படத்தில் வெறும் 5 நிமிட காட்சி தானாம்.
சிறப்பு தோற்றத்தில் வெறும் 5 நிமிடங்கள் மட்டுமே இப்படத்தில் நடிக்கும் இவருக்கு ரூபாய் 35 லட்சம் சம்பளமாம். இந்த செய்தி வெளியானதில் இருந்து டோலிவுட்டில் இது பற்றிய பேச்சு தான்.