சென்னையயை அடுத்துள்ள கோவிலம்பாக்கத்தில் வசித்து வந்தவர் மணிகண்டன்(22). இவரும் அப்பகுதியைச் சேர்ந்த திவ்யாவும் சில வருடங்களாக காதலித்துவந்துள்ளனர்.
மணிகண்டனுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் தினமும் குடித்துவிட்டு வருன் அவரை அவரது குடும்பத்தினர் கண்டித்துள்ளனர்.இதில் பெற்றோருக்கும் – மணிகண்டனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி இரவு மணிகண்டன் குடித்துவிட்டு வீட்டுக்குள் நுழைந்துள்ளார். இதைக்கண்டித்த பெற்றோர் அவரை வீட்டுக்குள் அனுமதிக்காமல் வெளியே தள்ளி கதவை தாழைட்டனர்.
இதனால் கோபம் அடைந்த மணிகண்டன் பாட்டிலில் வைத்திருந்த மண்ணெண்ணெயை தனது உடலில் ஊற்றி பெற்றோர் முன்னிலையில் தீவைத்துக்கொண்டுள்ளார்.
இதனை எதிர்பார்க்காத பெற்றோர் கதறிக்கூச்சலிட்டனர். பின்னர் அருகில் வசிப்போர் உடனே ஓடிவந்து மணிகண்டன் உடலில் தீயை அணைத்து, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக்கொண்டு சென்றனர்.ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மணிகண்டன் இறந்தார்.
இதுபற்றி அறிந்த அவரது காதலி திவ்யா மனமுடைந்து வீட்டில் தூக்கு மாட்டித் தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.