புதிதாக திருமணமான கணவன், மனைவி இடையே ஓர் ஒப்பந்தம் போட்டனர். இன்று யார் வந்தாலும் கதவை திறக்கக்கூடாது என்பதே அந்த ஒப்பந்தம். அன்று கணவருடைய அம்மா, அப்பா வந்துள்ளனர். இருவரும் அவர்கள் வருவதை பார்த்ததோடு இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். கணவனுக்கு கதவை திறக்க வேண்டும் என்ற ஆசை…
ஆனால், அக்ரிமெண்ட் போட்டது நினைவுக்கு வந்தது… அதனால் கதவை திறக்கவில்லை அவன்.. அவர்கள் யாரும் இல்லை என்று நினைத்து போய்விட்டனர். கொஞ்ச நேரம் கழித்து மனைவியின் அம்மா அப்பா வந்து கதவை தட்டினார்கள். இருவரும் ஓருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஆனால் மனைவிக்கு கண்கள் கண்ணீரால் குளமானது. என்னால் கதவை திறக்காமல் இருக்கமுடியாது என்று சொல்லி கதவை திறந்தாள். ஆனால் கணவன் ஒன்றும் சொல்லவில்லை.
பின்பு வருஷங்கள் உருண்டோடின… இரண்டு ஆண் குழந்தை பிறந்தது. மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்தது. கணவன் பெண் குழந்தை பிறந்த சந்தோஷத்தில் பெரிய அளவில் செலவு செய்து அனைவருக்கும் பார்ட்டி கொடுத்து கொண்டாடினான்.. அதற்கு மனைவி இரண்டு ஆண் குழந்தை பிறந்ததற்கு இவ்வளவு பெரிய அளவில் கொண்டாடவில்லை ஏன் பெண் குழந்தை பிறந்தவுடன் இவ்வளவு பெரிய பார்ட்டி கொடுக்கிறீங்க என்று கேட்டாள்…
அதற்கு கணவன் ரொம்ப நிதானமாக.. ஏனெனில் பிற்காலத்தில் எனக்காக கதவை திறக்க ஓரு பெண் பிறந்துவிட்டாள்… என்றான் கர்வத்துடன்….!