இசைஞானி இளையராஜாவின் 76வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் ஈவிபி பிலிம் சிட்டியில் இசை கொண்டாடும் இசை இளையராஜாவின் இசை நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இது திரை இசை கலைஞர்களின் சங்கத்திற்கு கட்டிடம் கட்டுவதற்காக நிதி திரட்டும் நிகழ்ச்சியாக இது நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் நீண்ட நாட்களுக்கு பிறகு பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் இளையராஜாவும் ஒரே மேடையில் ரசிகர்களை பாடி பேசி மகிழ்வித்தனர்.
அவர்களை தவிர ஏசுதாஸ், மனோ, பாம்பே ஜெயஸ்ரீ, உஷா உதுப், பவதாரணி, மது பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக கமலஹாசன், விவேக், தேவிஸ்ரீ பிரசாத், ஸ்ரீகாந்த் தேவா, ஸ்வேதா, சுஜாதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் இளையராஜா பேசும்போது இசைக் கலைஞர்களின் சங்கத்திற்கான கட்டடத்தை என் சொந்த செலவில் கட்டி தருவதாக அறிவித்தார்.