விஜய் சேதுபதி பட நடிகைக்கு திருமணம்? முன்னணி நடிகரை காதலிக்கிறாரா??

விஜய் சேதுபதி நடித்த ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தவர் தெலுங்கு நடிகை நிஹாரிகா. அந்த படம் பிளாப் ஆனதால் நிஹாரிகாவிற்கு தமிழில் வேறு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் நிஹாரிகா நீண்ட நாட்களாக தெலுங்கு நடிகர் நாக சவுரியாவை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. அவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் என்று தற்போது தெலுங்கு சினிமா வட்டாரத்தில் செய்தி பரவி வருகிறது.

அவர்கள் இருவரும் இன்ஸ்டாகிராமில் பேசிக்கொண்டது தான் இந்த செய்திக்கு காரணம்.