எந்த ஒரு சினிமா நிகழ்ச்சி இருந்தாலும் சரி அஜித், விஜய் பெயர்கள் இடம்பெறாமல் இருக்காது.
பேட்டிகளிலும் சொல்லலாம், பாடல் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்த அஞ்சனா திருமணத்திற்கு பின் சினிமா பக்கம் வராமல் இருந்தார்.
குழந்தை பெற்ற பிறகு இப்போது மீண்டும் சினிமாவில் வலம் வர ஆரம்பித்துள்ளார். பிரபல தொலைக்காட்சியில் பிரபலங்களை பேட்டி கொடுக்கு நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இருக்கிறார்.
அவரது நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் சித்தார்த் விபின் கலந்துகொள்ள அவரிடம் ஒரு வரியில் அஜித் பற்றி சொல்ல கேட்டுள்ளனர்.
அதற்கு அவர் அஜித் பற்றி சொல்லவே முடியாது, வார்த்தைகளே இல்லை, அவர் ஒரு அதிசயம் என கூறியுள்ளார்.